கடலூர்,ஆக. 25 இந்தியாவை கார்ப்பரேட்டு களின் கையில் ஒப்படைக்க பாஜக முயல்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கடலூரில் நடைபெற்ற சிபிஎம் முப்பெரும் விழாவில் அவர் பேசியது வருமாறு: மத்தியில் உள்ள பாஜக அரசு இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்க முயல்கிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து சமஸ்கிருதம், இந்தியை தமிழக மாணவர்கள் மீது திணிக்க முயற்சிக்கிறது. 2016ஆம் ஆண்டு பிஜேபி அரசின் நிதி ஆயோக் அரசுப் பள்ளி களில் 20க்கும் குறைவான மாண வர்கள் இருந்தால் அதனை மூட வேண்டும் என பரிந்துரைத்தது. அதுதான் தற்போது அமலுக்கு வர முயற்சிக்கிறது. இதே நேரத்தில் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் மூடிய அரசுப் பள்ளிகளைத் திறந்த தோடு, இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்த கடந்த 3 ஆண்டு களில் தனியார் பள்ளிகளில் படித்த 5 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அந்த அளவிற்கு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி கல்வியில் முன்னேறியுள்ளது கேரள அரசு. தமிழகத்தில் ஒரு அரசுப் பள்ளியை க்கூட மூட விடமாட்டோம் என்ற உறுதி யோடு நாம் போராடி வருகிறோம். அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசி னார்.
உ.வாசுகி
வானொலியில் மனதின் குரல்நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடியின் மனதில் ஏழைகள் இல்லை, அம்பானி,அதானி ஆகியோர் தான் உள்ளனர் என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார். இத்தாலியின் முசோலினி கூறுவதைப்போல தண்ணீரில் இறங்காமல் நீச்சல் அடிக்கும் உரிமையையும், அடுத்தவருக்கு கேட்காமல் பேசும் உரிமையும் எல்லையற்ற உரிமை என்று மோடி கூறுகிறார். பொய்யர்களின் ஆட்சி யில் உண்மையைப் பேசுவதே ஒரு வகையில் முற்போக்குதான். மோடி மனதின் குரல் என மக்களி டம் பேசுகிறார். ஆனால் உண்மை யில் அவர் மனதில் இருப்பது ஏழை, எளிய மக்கள் அல்ல. கார்ப்பரேட்டு கள்தான் அவர் மனதில் இருக்கின்ற னர். அதானி, அம்பானிகள்தான் அங்கு உள்ளனர். திரைப்படத்தில் கிணத்தை காணோம் என்ற வடிவேலின் நகைச்சுவை காட்சி அனைவருக்கும் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் ஏரியைக் காணோம், குளத்தை காணோம், மலையைக் காணோம், தற்போது இந்திய வரை படத்தில் ஒரு மாநிலத்தையே காணோம். பிஜேபியினர் பணம் கொடுத்து குதிரை பேரம் நடத்தி எதிர்க்கட்சியினரை இழுத்து ஆட்சியைப் பிடிக்கின்றனர். ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மக்கள், ஒரே மொழி எனக் கூறி தமிழை அழிக்க வரும் பாஜகவை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். இவ்வாறு வாசுகி உரையாற்றி னார்.